கொரோனா பரவல் அச்சம் 10, 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தலாம் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும் மே மாதம் முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களும் தேர்வு எழுதும்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, தமிழ்நாடு பாடத்திட்டத்தின்படியான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். ஒருவேளை பொதுத் தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் ஆன்லைன் முறையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: