தென்கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் தாக்கிய ஃப்ரெடி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்துள்ளது. மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி என்ற பருவகால சூறாவளி புயல் காரணமாக கனமழை பெய்துவருகிறது. பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப் பட்டன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்துள்ள நிலையில், அவற்றில் 438 உயிரிழப்புகள் மலாவி நாட்டில் மட்டும் பதிவாகியுள்ளது. கனமழையுடன் புயல் நீடித்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. புயலால் பாதிக்கப்பட்டவர்க ளை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!! appeared first on Dinakaran.