நிறைவு பெற்றது வாக்குப்பதிவு நேரம்..! தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலத்தில் 475 தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு

கொல்கத்தா: தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலத்தில் 475 தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகின்றன. மேற்கு வங்கத்தைத் தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களுக்கும் இன்றோடு தேர்தல் முடிவடைகின்றன. அசாம் மாநிலத்திலும் மேற்கு வங்கத்திலும் 3ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று மட்டும் மொத்தமாக 475 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

தமிழ்நாட்டைத் தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஆரம்பம் முதலே தமிழ்நாட்டில் வாக்களிப்பது தொய்வடைந்த நிலையிலேயே இருந்தன. தற்போது 5 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 63.60 சதவீதமும், கேரளாவில் 69.93 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 77.68 சதவீதமும், அசாமில் 78.94 சதவீதமும், புதுச்சேரியில் 77.90 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்நிலையில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலத்தில் 475 தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றுள்ளது.

Related Stories: