ஆந்திரா, தெலுங்கானா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.!

டெல்லி: ஆந்திரா, தெலுங்கானா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்ற 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. ஆந்திரா 25, தெலுங்கானா 17, மராட்டியம் 11, ம.பி. 8, பீகார் 5, ஒடிசாவில் 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4ம் கட்ட மக்களவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 62.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநில, யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவைக்கான முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.

2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி 88 தொகுதிகளுக்கும், 3ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதியும் நடந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று 4ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திராவின் 25 மக்களவை தொகுதிக்கும், 175 சட்டமன்ற தொகுதிக்கும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசாவில் 4 (28 சட்டசபை தொகுதி உட்பட), பீகாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, உத்தர பிரதேசத்தில் 13, மேற்குவங்கத்தில் 8, காஷ்மீரில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.

4ம் கட்ட மக்களவை தேர்தலில் 96 தொகுதிகளில் மொத்தம் 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1.92 லட்சம் வாக்குச் சாவடிகளுக்கு 19 லட்சத்துக்கும் அதிகமான தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வந்தனர். இந்நிலையில் 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்ற 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4ம் கட்ட மக்களவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 62.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

The post ஆந்திரா, தெலுங்கானா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.! appeared first on Dinakaran.

Related Stories: