அசாமில் குளறுபடி இருப்பதோ 90 பேர்; பதிவான வாக்கு 171

ஹப்லாங்: அசாம் மாநிலம், திமா ஹாசோ மாவட்டத்தில் ஹாப்லாங் தொகுதியில் கடந்த ஒன்றாம் தேதி 2ம் கட்ட வாக்கு பதிவு நடந்தது. இதில் 74 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தொகுதிக்குட்பட்ட 107(ஏ) கோட்லிர் எல்பி பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் வாக்காளர் பட்டியலில் 90 பேர் மட்டுமே இருந்த நிலையில் 171 வாக்குகள் பதிவாகி இருந்தது. 90 பேர் இருந்த வாக்காளர் பட்டியலை ஏற்பதற்கு கிராம தலைவர் மறுத்துவிட்டதாகவும் பின்னர் அவர் தன்னிடம் இருந்த பட்டியலின்படி வாக்காளர்களை வாக்கு போடுவதற்கு அனுமதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, 4 தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

Related Stories: