ஜம்மு காஷ்மீரில் உயரமான செனாப் பாலத்தின் ஆர்ச் அமைக்கும் பணி நிறைவு

கவ்ரி: உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ள ஜம்மு காஷ்மீரின் செனாப் பாலத்தின் வளைவு அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. ஜம்மு காஷ்மீரிலுள்ள பள்ளத்தாக்குகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் செனாப் நதியின்மீது 1.3 கிமீ தொலைவில் ரயில்வே பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. சுமார் 1,486 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த பாலத்தின் வளைவு பகுதியை அமைக்கும் பணி நேற்று முடிவடைந்தது. காணொலி வாயிலாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று இந்த பணிகளை ஆய்வு செய்தார்.

‘‘கட்டடக் கலையில் அதிசயமாக, உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நம் கனவுத்திட்டத்தின் அருகில் நெருங்கியுள்ளோம். வளைவு பணி முடிந்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்டப் பணிகளுக்கு நாம் செல்ல வேண்டும். அடுத்த வருடத்துக்குள் பாலத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிடும்’’ என்று ரயில்வேயின் மூத்த அதிகாரி கங்கல் கூறியுள்ளார். செனாப் ரயில்வே பாலமானது ஆற்றின் மேலே இரண்டு மலைகளுக்கு நடுவே 359 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயரம் பிரான்சின் பாரிஸில் உள்ள ஈபில் டவரைவிட 35 மீட்டர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: