திருப்பதியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக சக்தியை நிலை நிறுத்த வேண்டும்-துணை ஆணையாளர் பேச்சு

திருப்பதி :  திருப்பதியில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக சக்தியை நிலை நிறுத்த வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையாளர் சந்திரமவுலீஸ்வரர் கூறினார்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி மாநகராட்சி மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் வருகிற 17ம் தேதி திருப்பதி பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக தாரகராம விளையாட்டு மைதானத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், 300க்கும் மேற்பட்ட மகளிர் இணைந்து 100 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்ட இந்திய வரைபடத்தை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் சந்திரமவுலீஸ்வரர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிரிஷா பங்கேற்றனர். அப்போது, துணை ஆணையாளர் சந்திரமவுலீஸ்வரர் பேசுகையில், ‘தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும். நமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். வாக்காளர்கள் சக்தியை நிலை நிறுத்த வேண்டும்’ என்றார்.

Related Stories: