ஹரிநாடாருக்கு ஆதரவாக கிராமங்களில் தீவிர பிரசாரம்; ஆலங்குளம் தொகுதி மக்கள் தான் எனது உயிர் மூச்சு: ராக்கெட் ராஜா பேச்சு

ஆலங்குளம்: ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களான ரெட்டியார்பட்டி, கடங்கநேரி, கிடாரக்குளம், குறிப்பன்குளம், கீழபட்டமுடையார்புரம், குருவன்கோட்டை, ஆலங்குளம் பேரூர் பகுதிகளான மார்க்கெட், சந்தன மாரியம்மன் கோவில் தெரு, நத்தம் மாரியம்மன் கோவில் தெரு, அண்ணாநகர் பகுதிகளுக்கு சென்று தலைக்கவசம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது ராக்கெட் ராஜா பேசியதாவது, ‘தமிழகமே திரும்பி பார்க்கும் ஒரே தொகுதி ஆலங்குளம். எனது ரத்த உறவுகளை நம்பியே ஆலங்குளத்தில் களம் இறங்கியுள்ளோம். இது ஹரிநாடார் என்ற தனிமனிதனின் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த ஆலங்குளம் தொகுதி மக்களின் பிரச்னை.

அதனை தீர்க்க ஆலங்குளத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஹரிநாடாருக்கு தலைக்கவசம் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இளைஞர்கள் ஒருபோதும் தவறான வழியில் செல்ல மாட்டார்கள். எங்களது வெற்றி இங்கு கூடியுள்ள தாய்மார்களிடமும், சகோதரர்களிடமும் மட்டுமே உள்ளது. ஆலங்குளம் மண்ணை மீட்டெடுக்க வேண்டிய உரிமையும் கடமையும் எங்களிடம் மட்டுமே உள்ளது. நமக்கென்று ஒரு நிலை வரும். இந்த முறை அதிகாரத்தை எங்களிடம் கொடுத்துப் பாருங்கள். நான் இங்கு வந்திருப்பது தேர்தலுக்காக அல்ல, உங்களில் ஒருவனாக வந்துள்ளேன்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் என்னுடைய எண்ணமும் சிந்தனையும் உங்களைப் பற்றி மட்டுமே இருக்கும். நீங்கள் தான் எனது உயிர் மூச்சு. எனவே ஹரிநாடாரை எம்எல்ஏ ஆக்கினால் உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வோம் என்றார். பிரசாரத்தில் தலைமை நிலைய செயலாளர் பழனி, மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் லாரன்ஸ், விக்னேஷ் கார்த்திக், தென்காசி மாவட்ட செயலாளர் ஆனந்த், ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளர் ஜோசப் ,மாநில சமூக வலைதள அணி தலைவர் ஜீவா, மாநில சமூக வலைதள அணி செயலாளர் சேர்மராஜ், மாநில இளைஞரணி செயலாளர் சத்ரியன் பாபு,

மாநில இளைஞரணி தலைவர் பேய்குளம் அந்தோணி, மாநில பொருளாளர் அருண், நெல்லை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாலமுருகன், தென்காசி மாவட்ட சமூக வலைதள அணி செயலாளர் கபிலன், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் மணிகண்டன், தென்காசி மாவட்ட துணைத்தலைவர் கடையம் மகேஷ், செல்வராஜ், நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் பன்னீர்செல்வம், ஆலங்குளம் தொகுதி மகளிரணி செயலாளர் கார்த்திகா, ஆலங்குளம் ஒன்றிய துணை செயலாளர் அருள் சுரேஷ், ஆலங்குளம் பேரூர் நகர செயலாளர் அலெக்ஸ், ஆலங்குளம் பேரூர் நகர துணை செயலாளர் கார்த்திகேயன், குருவன்கோட்டை பத்மநாபன், சமூக ஆர்வலர் சோனா மகேஷ், வேப்பங்காடு அருண், சதீஷ் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: