ராயபுரம் தொகுதி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் வாக்குறுதி

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குசேகரித்து பேசுகையில்,\”1991ம் ஆண்டு முதல் தொடர்ந்து ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பணியாற்றி வருகிறேன். தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் முன்னோடியாக திகழ்கிறேன். கொரோனா காலத்தில் பொது மக்களுக்கு தலா 1000 நிவாரணம் வழங்கப்பட்டது. ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் வழங்கப்படும், பெண்களுக்கு 1,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும், முதியோர் உதவித்தொகை 2000 வழங்கப்படும், இலவச வாஷிங் மெஷின் வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். பொதுமக்கள், இளைஞர்கள், முதியோர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதி செய்து தருவேன். ராயபுரம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற சிறப்பு திட்டம் ஏற்படுத்த உள்ளேன். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக அது இருக்கும். எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை மீண்டும் வெற்றிபெற செய்யவேண்டுகிறேன்\” என்றார்.

Related Stories: