பாமகவை சேர்ந்தவர்கள் அதிமுக கூட்டணிக் கட்சியினர் தாங்கள்தான் வேட்பாளர் என வாக்கு சேகரிக்க வேண்டும்: ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: பாமகவை சேர்ந்தவர்கள் அதிமுக கூட்டணிக் கட்சியினர் தாங்கள்தான் வேட்பாளர் என வாக்கு சேகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தகைய வெற்றியை அடைய வேண்டும் என்று நினைத்தோமோ. அந்த வெற்றி உறுதியாகி விட்டது இதுவரை 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருக்கிறேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட போது மாநாட்டிற்கு இணையாக மக்கள் திரண்டு வந்தனர்.

நம் மீது மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு இதுவே சாட்சி. இதுவே வெற்றிக்கு அடித்தளமாகும். தேர்தல் பரப்புரைக்காக நான் சென்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களின் முகங்களில் மகிழ்ச்சியையும், மலர்ச்சியையும் பார்க்க முடிகிறது. ‘‘நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். தமிழ்நாட்டின் தேர்தல் களம் அதிமுக, பா.ம.க. கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. மக்களின்  ஆதரவு நன்றாக விளைந்திருக்கிறது. அதை பக்குவமாக அறுவடை செய்ய வேண்டியது மட்டும் தான் நமது பணியாகும்.

இதுவரை வாக்காளர்களை 10 முறை சென்று வாக்கு சேகரித்திருந்தாலும், இனி மீதமுள்ள நாட்களில் இன்னும் குறைந்தது 5 முறையாவது வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் செல்ல வேண்டும் என்பதால் அவர்களால் ஒரு முறைக்கு மேல் வர இயலாது. அதனால், அதிமுக கூட்டணிக் கட்சியினர் ஒவ்வொருவரும் தாங்கள் தான் வேட்பாளர் என்று நினைத்துக் கொண்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. பாமகவினர் இனி மீதமுள்ள நாட்களில் இன்னும் குறைந்தது 5 முறையாவது வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும்.

Related Stories: