சிக்கமகளூருவுக்கு சுற்றுலா வந்த பயணிகள் 8 பேருக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை

சிக்கமகளூரு: சந்திரதிரிகோண மலை, பாபாபுடன் கிரி போன்ற சுற்றுலா தளங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிக்கமகளூரு மாவட்டத்தில் சந்திரிதிரிகோண மலை, பாபாபுடன்கிரி போன்ற புகழ்பெற்ற சுற்றுலா தளங்களை காண பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதையடுத்து மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுற்றலா வரும் பயணிகளுக்கு கைமாரா சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது சில சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 8 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதியானதையடுத்து அவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளியூர் சுற்றுலா பயணிகள் சிக்கமகளூரு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்றும், சான்றிதழ் கொண்டு வராதவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: