இந்தியில் பேசி வாக்கு சேகரிக்கும் பாஜக தலைவர்கள்: வாக்காளர்கள் கடும் அதிர்ச்சி

சென்னை துறைமுகத்தில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து ஒரு பட்டாளமே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இங்கு வந்த ஜே.பி.நட்டா, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மற்ற இடங்களில் பேசுவது போல இவர்கள் இங்கு ஆங்கிலத்தில் பேசாமல், அனைவரும் இந்தியில் தான் பேசி வாக்கு சேகரித்தனர்.

அங்கு வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் இருப்பதால் தான் இவர்கள் இவ்வாறு இந்தியில் பேசி வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு வேலைகளில் வடமாநிலத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் இந்தி பேச தெரிந்திருக்க வேண்டும்.

கோப்புகளை இந்தியில் கையாள வேண்டும் என்று உத்தரவு அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இந்தியை தமிழகத்தில் புகுத்த பாஜக முயற்சி செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் இந்தியில் பேசி பிரசாரம் செய்வது என்பது  பின்னடைவை தான் ஏற்படுத்தும் என்றும் பாஜகவின் உண்மையான தொண்டர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories: