‘நான் தினமும் மாட்டு சிறுநீரை குடிக்கிறேன். அதனால் எனக்கு கொரோனா இல்லை’ – பாஜக எம்.பி. பிரக்யா சிங் சர்ச்சைப் பேச்சு!

போபால்: மாட்டு கோமியத்தை நாள்தோறும் குடித்து வந்தால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்று பாஜக எம்.பி. பிரக்யா சிங் தவறான தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதி பாஜக உறுப்பினரான பிரக்யா சிங் சர்ச்சைகளுக்கு பேர் போனவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டு கோமியம் மற்றும் பால் பொருட்களை கலந்து உண்டால் புற்றுநோய் குணமாகும் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்போது போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்;  பசுவின் சிறுநீர் கொரோனாவால் ஏற்படும் நுரையீரல் தொற்று நோயை குணப்படுத்துகிறது.நான் தினமும் மாட்டு சிறுநீரை குடிக்கிறேன். அதனால் எனக்கு கொரோனா இல்லை என கூறினார். ஏற்கனவே இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய மருத்துவ கழகம் பசுவின் சாணம் அல்லது சிறுநீர் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுவதாக எந்த அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லை என கூறியுள்ளது. இது தவறான நடைமுறை என்றும் இதனால் விலங்குகள் மூலம் மேலும் மனிதர்களுக்கு நோய் பரவும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். …

The post ‘நான் தினமும் மாட்டு சிறுநீரை குடிக்கிறேன். அதனால் எனக்கு கொரோனா இல்லை’ – பாஜக எம்.பி. பிரக்யா சிங் சர்ச்சைப் பேச்சு! appeared first on Dinakaran.

Related Stories: