ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ள வக்கீல் சாப் திரைப்படத்தின் டிரைலரை காண திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஓடியதில் பலர் காயமடைந்தனர். ஆந்திரா, தெலுங்கானாவில் பவர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் பவன் கல்யாண், ஜனசேனா என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். பாலிவுட்டில் பிங்க் மற்றும் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகிய நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பவன் கல்யாண் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதனை காண திரையரங்குகளின் முன் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், பவன் கல்யாண் கட்டவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.