இந்தியா-வ.தேசம் இடையே 5 ஒப்பந்தம் கையெழுத்து

தாகா: இந்தியா, வங்கதேம் இடையே சுகாதாரம், வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. வங்க தேச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவாக இரு நாடுகளுக்கு இடையே சுகாதாரம், வர்த்தகம், எரிசக்தி, வளர்ச்சி ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. மேலும் மனிதாபிமான முயற்சியாக வங்கதேசத்துக்கு 109 ஆம்புலன்ஸுகளுக்கான சாவியையும், 1.2 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கான அடையாளப்பெட்டியையும் ஷேக் ஹசீனாவிடம் பிரதமர் மோடி வழங்கினார். பின்னர் மோடி-ஹசீனா இணைந்து இந்தியா, வங்கதேசம் இடையே புதிய பயணிகள் ரயிலை தொடங்கி வைத்தனர். இந்த ரயில் வங்கதேச தலைநகர் தாகாவிலிருந்து மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி வரை இயக்கப்படும். ஏற்கனவே இந்தியா, வங்கதேசம் இடையே மைடிரீ எக்ஸ்பிரஸ் (தாகா-கொல்கத்தா), பந்தன் எக்ஸ்பிரஸ் (குல்னா-கொல்கத்தா) ஆகிய 2 பயணிகள் ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: