பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்: டி.கே.எம்.சின்னையா பிரசாரம்

சென்னை: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா சேலையூர் பகுதியில் நேற்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் சின்னையா பேசுகையில், ‘நான் அமைச்சராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை இந்த பகுதிகளில் நிறைவேற்றி கொடுத்துள்ளேன். குறிப்பாக சேலையூர் குளம், ஏரி ஆகியவற்றை சீரமைத்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகப்படுத்தினேன். வெள்ளம் வந்தபோது மக்களோடு மக்களாக இருந்து இந்த பகுதிகளுக்கு உடனடியாக உதவிகள் செய்தேன். இந்த பகுதியின் முக்கிய பிரச்னையான கேம்ப் ரோடு போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இணைப்பு பாலத்தை கவுரிவாக்கம் முதல் கிழக்கு தாம்பரம் சேலையூர் வரை அமைத்து கொடுப்பேன். எடப்பாடி அறிவித்த பல்வேறு  மக்கள் நலத்திட்டங்களை உடனடியாகவே பெற்று தருவேன்.

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வருவதற்கும், விலையில்லா வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றை பெற்று தர நடவடிக்கை எடுப்பேன்,’ என்றார். பிரசாரத்தின் போது, அதிமுக நகர செயலாளர் கூத்தன், நகரமன்ற முன்னாள் துணை தலைவர் கோபிநாதன்,  நகரமன்ற முன்னாள் உறுப்பினர் சேலையூர் சங்கர், எட்வர்ட், பாஜக தாம்பரம் கிழக்கு பகுதி தலைவர் வெங்கட சுப்பிரமணியன், நடராஜன், திவாகர், பாமக விநாயகம், புரட்சி பாரதம் கேட் சேகர் உள்பட கூட்டணி கட்சியினர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Related Stories: