வாஷிங்டன்: அமெரிக்காவில் திருநங்கை ஒருவரை அமைச்சராக நியமித்து, அதிபர் பைடன் வரலாறு படைத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்று உள்ள ஜோ பைடன், தனது அமைச்சரவையில் எல்லா தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளித்து வருகிறார். குறிப்பாக, தனது அரசில் இந்திய வம்சாவளியினருக்கு இந்நாட்டில் இதுவரையில் இல்லாத வகையில், மிகப்பெரிய முக்்கிய பதவிகள் வழங்கி கவுரவித்துள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் இருக்கிறார்.இந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், திருநங்கை ஒருவரை சுகாதாரத் துறை இணையமைச்சராக பைடன் நியமித்துள்ளார்.