கொரோனா காலத்தில் துப்புரவு பணியாளர்களின் சேவை சிறப்பானது: ஏபிஎம்சி முன்னாள் தலைவி பாராட்டு

கோலார்: கோவிட்-19 பாதிப்பு நேரத்திலும் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்டு வந்த துப்பரவு தொழிலாளர்களின் பணிகள் சிறப்பு மிகுந்தது என்று ஏ.பி.எம்.சி. முன்னாள் தலைவி ராஜேஸ்வரி தெரிவித்தார். கோலார் நகரில் துப்பரவு தொழிலாளர்களுக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜேஸ்வரி பேசியதாவது: நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்ட நேரத்திலும் துப்பரவு தொழிலாளர்கள் எந்த அச்சமும் கொள்ளாமல் தினமும் தங்களின் பணிகளை வழக்கம் போல் செய்து வந்தனர். இது சிறப்பு மிக்க பணியாக தான் நாம் பார்க்க வேண்டும்.  அதே போல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது தங்களின் கைகள் அசுத்தம் ஏற்படும் என்று தெரிந்தும் நம்மை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்வதில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வருகின்றனர்.

தினமும் பல்வேறு பணிகள் இருந்தாலும் நகரை சுத்தப்படுத்தும் பணியில் துப்பரவு தொழிலாளர்கள் முன் இருப்பார்கள். கொரோனா பாதிப்பு நேரத்திலும் கடுமையாக உழைத்து வரும் துப்பரவு தொழிலாளர்களின் சேவையை பாராட்டி குளிர்பானம் வழங்கப்பட்டது என்றார். இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகரசபை கமிஷனர் காந்த் பேசியதாவது: துப்பரவு தொழிலாளர்கள் தினமும் மகிழ்ச்சியுடன் தங்களின் பணிகளை தொடங்கி அவைகளை முழுமையாக முடித்து வருகின்றனர். இவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க வேண்டும். நகரசபை சார்பாக அவர்களின் கோரிக்கைளை நிறைவேற்றி கொடுக்கப்படும். துப்பரவு தொழிலாளர்கள் குப்பை, கழிவுகளை அகற்றி வரும் சேவை மூலம் தேச சேவை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சமுக சேவை செய்து வரும் ராஜேஷ்வரி குளிர்பானம் வழங்கியுள்ளது வரவேற்க தக்கது என்றார்.

Related Stories: