குடிசை இல்லா நிலை உருவாக்குவேன்: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

சென்னை: ராயபுரம் தொகுதிக்குட்பட்ட 48வது வார்டு பகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பிரசாரம் செய்தார். தொடர்ந்து, பார்த்தசாரதி தெரு, நடராஜன் தெரு, டி.வி.கே.தெரு, ஜமால் சவுகார் தெரு, முனிராம் பாண்டியன் தெரு, வீரபத்திர தோட்டம், மண்ணப்ப முதலி தெரு, நைனியப்பன் தெரு, முத்தையா முதலி தெரு, தட்டான்குளம் தெரு, சுந்தர விநாயகர் கோயில் தெரு, அம்மையப்பன் தெரு, தங்கவேல் பிள்ளை தோட்டம், துளசிங்கம் தெரு, உல்லாரம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.  அப்போது பேண்ட் வாத்தியங்கள் முழங்க அதிமுக தொண்டர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள பெண்கள் ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.

அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, “அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் கிடைக்க உதவி செய்துள்ளேன். கொரோனா பாதிப்பு நேரத்தில் ரேஷன் கடைகளில் வழங்கிய ஆயிரம் ரூபாய் பணத்தை மக்களுக்கு சிரமம் இன்றி வழங்க நேரடியாக சென்று ஆய்வு செய்து உரிய முறையில் வழங்க ஏற்பாடு செய்தேன். குடிசை பகுதிகளே இல்லாத நிலையை உருவாக்குவேன். வீடு இல்லாதவர்களுக்கு மட்டுமில்லாமல் வீடுகள் கட்டப்பட உள்ள இடத்தில் குடியிருந்தவர்களுக்கு கூட குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி உள்ளேன்,” இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: