தமிழகத்தில் நடப்பது ஊழல் நிர்வாகம்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சாடல்

ஆவடி சட்டமன்ற தொகுதியில் சகாயம் அரசியல் பேரவையின் நிறுவனர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், ஆவடியில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: தேர்தலில் சகாயம் அரசியல் பேரவை சார்பாக 17 வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளோம். தமிழகத்தில் ஊழலும், ஊழல் நிர்வாகமும் அகற்றப்பட வேண்டும்.

மேலும், எந்த சூழ்நிலையிலும் இந்த நாட்டை மத அடிப்படையிலே நடத்துகிற மதவாத சக்திகளை வேரூன்ற அனுமதிக்கக்கூடாது என்ற அடிப்படையில் அரசியல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். இதோடு மட்டுமல்லாமல், ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை மக்கள் ஆதரிப்பார்கள் என நம்புகிறேன். எல்லா பணிகளையும், நம்பிக்கையோடு தான் தொடங்க வேண்டும். நேர்மைக்கான காலம் இருப்பதாக நம்புகிறோம். அரசியலில் ஊழலுக்கான காலம் உண்டு என்பது போல, நேர்மைக்கான காலம் இருக்கிறது என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: