ரோடு போட வரல... ஓட்டு கேட்க வர்றீங்களா.. செல்லும் இடங்களில் எல்லாம் விரட்டும் மக்கள்: கலக்கத்தில் கந்தர்வகோட்டை அதிமுக வேட்பாளர் ஜெயபாரதி

கறம்பக்குடி: கந்தர்வகோட் டை(தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபாரதி ஓட்டு கேட்டு பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் அடிப்படை வசதி செய்யல..ரோடு போட வரல, ஓட்டு கேட்டு வருவது கேவலமா இல்லை. உங்களுக்கு ஓட்டு இல்லை என விரட்டியடிப்பது அதிமுக வேட்பாளர் ஜெயபாரதிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் தீத்தான்விடுதி ஊராட்சியை சேர்ந்த ஜெயபாரதி உதயகுமார் போட்டியிடுகிறார். தீத்தான்விடுதி ஊராட்சி மன்ற தலைவராக தற்போது பணியாற்றி வரும் இவர் கறம்பக்குடி,  கந்தர்வக்கோட்டை,  குன்றண்டார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.

 கடந்த 2 தினங்களுக்கு முன்பு இவரது சொந்த ஊராட்சியான தீத்தான் விடுதி ஊராட்சியில் உள்ள சுக்கிரன் விடுதி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற போது அந்த கிராமத்து இளைஞர்கள் அதிமுக அரசிடம் சாலைகளை சீரமைக்க கோரி நாங்கள் பலமுறை மனு கொடுத்தும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ரோடு போட வரல இப்ப ஓட்டு கேட்க வருவது கேவலம் என்ற பிளக்ஸ் பேனரை வைத்து வேட்பாளர் ஜெயபாரதிக்கு அதிர்ச்சியையும் கலக்கத்தை ஏற்படுத்தினர்.

இதேபோல் நேற்று  கந்தர்வக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோமாபுரம், மங்கனூர்,  அரவம்பட்டி,  நொடியூர் விராலிபட்டி போன்ற பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்  திரண்டு வந்து கடந்த 10 ஆண்டுகளாக எந்த அடிப்படைகளையும் செய்யாத அதிமுக கட்சி இந்த தேர்தலில் தோற்க   வேண்டும் என்று வாக்காளர்கள் ஆங்காங்கே பேசி கொண்டனர். இது அதிமுக வேட்பாளருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: