குளித்தலை அருகே வை புதூர் ரெட்ட பாலத்தில் பெயர்ந்து விழும் நிலையில் குடிநீர் குழாய் கான்கிரீட் பில்லர்-நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

குளித்தலை : குளித்தலை அருகே வைபுதூர் ரெட்டபாலத்தில் கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் குடிநீர் குழாய் பில்லர் உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வைபுதூர் கட்டளை மேட்டு இரட்டை வாய்க்கால் பகுதி வழியாக குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து மருங்காபுரி வரை காவிரி குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் கட்டளை மேட்டு வாய்க்கால் கடந்து செல்வதால் குடிநீர் குழாய் பலத்திற்காக மூன்று தூண்கள் கட்டப்பட்டு அதன் மூலம் மேலே குழாய் செல்கிறது.

இந்த தூண்கள் கட்டப்பட்டு பல நாட்கள் ஆனதால் தண்ணீர் வேகமாக வரும் நேரத்தில் தூண்களின் அடித்தளங்கள் மெல்லமாக உடைந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இந்த குடிநீர் குழாய் செல்வதால் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது .அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்பொழுது கட்டளை மேட்டு வாய்க்கால் பராமரிப்பு பணி நடைபெற்று வரும் நேரத்தில் இந்த தூண்களின் அடிப்பகுதியான பில்லர் பலம் இழந்து விழுந்து விடும் நிலையில் இருப்பதால் அதற்கு மேலும் வலுவூட்டும் வகையில் கான்கிரீட் தளம் அமைத்து பாதுகாக்க வேண்டுமென ஆற்று பாதுகாப்பு பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: