நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஆத்திரம் வங்கதேசத்தில் இந்து கிராமம் சூறையாடல்: முக்கிய நிர்வாகி உட்பட 23 பேர் கைது

தாகா: வங்க தேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களால் இந்து கிராமம் சூறையாடப்பட்டது. இந்த வழக்கில் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் உள்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் ‘ஹிபசாத் இ இஸ்லாம்’ என்ற அடிப்படைவாத அமைப்பின் மாநாடு கடந்த திங்கட்கிழமை டேரை உபாசிலா என்ற இடத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் மத உணர்வுகளைத் தூண்டும்படியாக அந்த அமைப்பின் இணை செயலாளர் மவ்லானா மப்தி மமுனுல் ஹக் பேசினார். இந்த கருத்துகளை விமர்சித்து நோவேகான் என்ற கிராமத்தை சேர்ந்த இந்து இளைஞர் பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் தொண்டர்கள், கடந்த புதன்கிழமை இரவு அந்த கிராமத்துக்கு ஆயுதங்களுடன் சென்று சூறையாடினர். வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. இவர்களின் தாக்குதலில் ஏராளமான இந்துக்கள் காயமடைந்தனர். பலர் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக வீடுகளை விட்டு ஓடி தலைமறைவாகினர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக 700க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கலவரத்தைத் தூண்டிய ஷாகிதுல் இஸ்லாம் ஸ்வாதின் என்ற அந்த அமைப்பின் முக்கியப் பிரமுகர் உள்பட 23 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

Related Stories: