ஆம்பூர் அருகே பச்சக்குப்பம் மலைக்காட்டில் தீ-வனத்துறையினர் போராடி அணைத்தனர்

ஆம்பூர்:  ஆம்பூர் அருகே பச்சக்குப்பத்தில் சாலையையொட்டி உள்ள மலைகாட்டில் ஏற்பட்ட தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.

ஆம்பூர் வன சரகத்திற்குட்பட்ட பச்சகுப்பத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள மலைப்பகுதியில் நேற்று திடீர் தீப்பிடித்தது. அப்போது, அங்குள்ள மரங்கள் தீ பிடித்து எரந்தது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியினர் பார்த்தனர்.

தொடர்ந்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அங்கிருந்த பச்சை மரக்கிளை, செடிகளை பயன்படுத்தி தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

இருப்பினும், காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியதால் வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் உட்பட விஷமிகள் சிலர் வைக்கும் இத்தகைய தீயால் வனப்பகுதியில் உள்ள பல்வேறு மரங்கள், மூலிகை செடிகள் மற்றும் வன விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க வனத்துறையினர் உரிய தீ தடுப்பு பள்ளங்களை உருவாக்கிட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: