சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக-வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா!: வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்ப்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாமக சார்ப்பில் கஸாலே போட்டியிடுகிறார். தொடர்ந்து, பாமக வேட்பாளர் கஸாலிக்கு வாக்கு கேட்டு பணம் பட்டுவாடா நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுக-வின் சிறுபான்மை பிரிவு துணை செயலாளராக உள்ள ஜெ.எம்.பஷீர், வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதிமுக சார்பில் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்துடன் 500 ரூபாய் வழங்குவது அதில் இடம்பெற்றுள்ளது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை பாமக-விற்கு ஒதுக்கியதால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக-வினர் சிலரே இந்த பணப்பட்டுவாடா வீடியோ - வை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாக்களர்களை வீட்டுக்கே வரவழைத்து, வாக்காளர் அட்டையை சரிபார்த்து பணம் கொடுக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: