விஜயகாந்துடன் திடீர் சந்திப்பு: சசிகலாவின் மானசீக ஆசி உள்ளது: டிடிவி.தினகரன் பரபரப்பு பேட்டி

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு நேற்று மதியம்  திடீரென சென்றார். அங்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். மேலும், அவருக்கு பூங்கொத்து கொடுத்து  வாழ்த்து தெரிவித்தார். அதை தொடர்ந்து, டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: அமமுக-தேமுதிக கூட்டணி வெற்றி கூட்டணி. தேமுதிக  தலைவர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். தமிழகத்தின் துரோக அதிமுக கூட்டணியை ஆட்சிக்கு வரவிட கூடாது என்பதே  எங்களின் குறிக்கோள்.

இத்தேர்தலில், அதிமுகவை தோல்வி அடைய செய்வதே எங்களின் ஒரே எண்ணம் மற்றும் நோக்கம். சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குதான்  உள்ளது. கட்டாயத்தின்பேரில், இக்கூட்டணி அமையவில்லை.  இக்கூட்டணி உறுதியான நிலையில், எங்கள் கட்சியின் 42 பேரும் வேட்பு மனுவை  வாபஸ் பெற்றுள்ளனர். விருத்தாசலத்தில் தேமுதிக சார்பில் போட்டியிடும் பிரேமலதாவுக்கு நாங்கள் உறுதுணையாக இருந்து அவரை வெற்றி பெற  செய்வோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தற்செயலாகத்தான் நின்றேன். எனினும், அங்கு வெற்றி பெற்றேன். தேமுதிகவுக்கு பக்குவம் இல்லை  என்கிறார் ஒரு அமைச்சர். விருத்தாசலத்தில் விஜயகாந்த் சுயமாக நின்று வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், எடப்பாடி முதல்வர் பதவியை எப்படி  தவழ்ந்து பெற்றார்.

Related Stories: