பெருந்துறையில் வேட்பாளர் வராததால் ரத்து உடுமலையில் பிரசாரத்திற்கு கமல் வராததால் வேட்பாளர் ஏமாற்றம்

உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று  உடுமலைக்கு ஹெலிகாப்டரில் வந்தார். அங்கிருந்து மடத்துக்குளம் சென்ற அவர் நால்ரோட்டில் வேட்பாளர் குமரேசனை ஆதரித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  ஒரு மாற்று அரசியல் வந்தால்தான் ஆட்சியின் தரம் மாறும், நிறம் மாறும். எங்கள் திட்டங்களையெல்லாம் எடுத்துச்  செல்ல இவர் இருக்கிறார்.  தங்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டு தமிழகத்தை மேம்படுத்த வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன்  வந்திருக்கிறார்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கை மேம்பட நல்ல திட்டங்கள் வகுப்பார்கள். அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த போட்டுக்கொள்ளும்  திட்டங்கள் இனி இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்நது கமல்ஹாசன் உடுமலையில் பிரசாரத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு வேட்பாளர் நிதி மற்றும் கூட்டணி  கட்சியினர் காத்திருந்தனர். ஆனால் கமல் வராததால் ஏமாற்றமடைந்தனர். பெருந்துறையில் மநீம சார்பாக நந்தகுமார் என்பவர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி நிர்வாகிகளுக்கும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நந்தகுமாருக்கு ஒத்து வராததால், பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.  இந்நிலையில் பெருந்துறை வந்த கமல்ஹாசனை வரவேற்க கட்சி நிர்வாகிகள், ஆட்கள் யாரும் இல்லாததால், அவரது வாகனம் நிற்காமல் சிவகிரி  நோக்கி சென்றது.

Related Stories: