மார்ச் முதல் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தமிழகத்தில் புதிதாக 945 பேர் பாதிப்பு: சென்னையில் 395 பேருக்கு தொற்று: 8 பேர் உயிரிழப்பு

சென்னை:தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், இந்த மாதம் முதல் தொற்று அதிகரித்து வருவது மக்களிடத்தில்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15ம் தேதி 759 பேர், 16ம் தேதி 867 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 945 பேருக்கு தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 395 பேருக்கு புதிதாக தொற்று அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 71,888 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 945  பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 56 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து தமிழகத்தில்  8,62,374 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று மட்டும் 576 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,43,999 பேர் குணமடைந்துள்ளனர். 5,811 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதை சேர்த்து பலி  எண்ணிக்கை 12,564 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: