எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளுக்கு சுரங்க உரிமையாளரை கைது செய்வது நியாயமா? அமைச்சர் முருகேஷ்நிராணி கேள்வி

பெங்களூரு: எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் சுரங்க உரிமையாளர்களை கைது செய்வது எந்த அளவுக்கு நியாயம் என்று அமைச்சர் முருகேஷ்நிராணி கேள்வி எழுப்பினார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற சுரங்கம் மற்றும் கல்குவாரி உரிமையாளர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் முருகேஷ்நிராணி பேசியதாவது:``சுரங்கம் நடத்தி வருபவர்களை வேறு துறைகளை சேர்ந்தவர்கள் திருடர்களை போல் பார்க்கும் சூழ்நிலை உள்ளது. இதை மாற்றியமைத்து கவுரவத்துடன் பார்க்கும் அளவுக்கு ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதே போல் சுரங்க பணியின் போது யாராவது தொழிலாளர்கள் உயிரிழந்தால் உடனே உரிமையாளரை கைது செய்து சிறைக்கு அனுப்பிவைப்பது எந்த அளவுக்கு நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.

நான் உட்பட பலர் சுரங்க தொழிற்சாலை நடத்தி வருகின்றனர். விபத்து நடைபெற வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. எதிர்பாராத ஒரு விபத்து நடந்தால் உரிமையாளரை கைது செய்து சிறைக்கு அனுப்பிவைப்பதால் நாடு, மாநிலம் வளர்ச்சியடைவது எப்படி முடியும். இதனால் விரைவில் தடையில்லா சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். துறையில் அதிகமான லஞ்சம் புழக்கத்தில் உள்ளது. இதை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் சுரங்கம் அதாலத் நடத்தப்படும். நான் அமைச்சர் பதவிக்கு வந்த பின்னர் ஷிவமொக்கா, சிக்கபள்ளாபுரா மாவட்டங்களில் குவாரிகளில் விபத்துக்கள் நடந்துள்ளது. சிக்கபள்ளாபுராவில் விபத்து நடந்த உடனே சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது விபத்துக்கு உரிமையாளர் காரணம் கிடையாது என்று தெரிய வந்தது. ஜெலட்டின் பொருட்கள் வேறு இடத்துக்கு மாற்ற முயற்சித்த போது விபத்து நடைபெற்றுள்ளது. சுரங்கம் மூடுவதால் அரசுக்கு பாதிப்பு ஏற்படும். தற்போது குவாரி உரிமையாளர்களுக்கு கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குவாரி, சுரங்க உரிமையாளர்களிடமிருந்து அரசுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அபராத தொகை நிலுவை வர வேண்டும். எதிர்பாராத விபத்து காரணமாக இவ்வளவு தொகை நிலுவையில் உள்ளது. இதனால் சுரங்க உரிமையாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த குழு அமைக்கப்படும்.

மாநிலத்தில் சுரங்கத்தின் மூலமாக 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குவாரி, சுரங்கம் நடத்த மற்ற துறைகளிடமிருந்து அனுமதி கடிதம் பெறுவது கடினமாகவுள்ளது. இதனால் 90 நாட்களுக்குள் அனுமதி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். குவாரி, சுரங்க உரிமையாளர்களிடமிருந்து அரசுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அபராத தொகை நிலுவை வர வேண்டும். எதிர்பாராத விபத்து காரணமாக இவ்வளவு தொகை நிலுவையில் உள்ளது.

Related Stories: