காங்கிரஸ் தனியாக போராட்டம்

டெல்லி: சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அனில் குமார் தலைமையில் ஜந்தர் மந்தரில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அனில்குமார் கூறுகையில், ”இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய அரசின் எதேச்சதிகாரத்திற்கும் டெல்லியில் ஜனநாயகம் கொலை செய்யப்படுவதற்கும் நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். மேலும் மத்திய அரசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக நாங்கள் இங்கு போராடுகிறோம்.

டெல்லியில் காங்கிரசுக்கு சட்டசபையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ ஒரு உறுப்பினர் கூட இல்லை. இருப்பினும் இந்த மசோதாவுக்கு எதிராக பொறுப்பான எதிர்க்கட்சியாக முதல் குரல் எழுப்பியது காங்கிரஸ் கட்சிதான். டெல்லி மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள் நாங்கள்தான். மக்கள் அதிகாரத்தால் தேர்வு செய்யப்பட்ட அரசை, அவர்களது பிரதிநிதிகளை இந்த சட்டம் மூலம் மத்திய அரசு கேலி செய்கிறது. மேலும் கவர்னர் வழியாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் டெல்லி அரசை இயக்க மத்திய அரசு முயல்கிறது. இந்த சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் மக்கள் சக்தியை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்தும்” என்று கூறினார்.

Related Stories: