சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்கா தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே ரயில் நிலையம் அமைக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
உயிரியல் பூங்கா எதிரில் ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக 2017- அளித்த மனு மீது ரயில்வேதுறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திருவேங்கடம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் ரயில்வே நிறுத்தம் அமைத்தல் எத்தனை பயணிகள் வருவார்கள்? என கேள்வி எழுப்பினர்.
ரயில் நிலையம் தொடர்பாக பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய ரயில்வே துறைக்கு நீதித்துறையினர் உத்தரவிட்டனர். ரயில் நிலையம் கோரிக்கை தொடர்பாக 4 வாரத்தில் புதிய மனுவை ரயில்வே துறைக்கு அளிக்க மனுதாரருக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மனுதாரர் கோரிக்கை குறித்து 8 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.