2025-26-ம் நிதியாண்டில் 3,405 ரயில் பெட்டிகளை தயாரித்து ஐசிஎப் சாதனை

சென்னை, ஏப்.7: ரயில் பெட்​டி தயாரிப்​பில் உலக புகழ்​பெற்ற இணைப்​பு பெட்டி தொழிற்​சாலை (ஐசிஎப்) பயணி​களின் தேவை மற்​றும் காலத்​துக்கு ஏற்ப, அதிநவீன ரயில் பெட்​டி, சுற்​றுலா​வுக்​கான ரயில் பெட்டி உள்பட 50க்​கும் மேற்​பட்ட வகை​களில் 600 வடிவ​மைப்​பு​களில் ரயில் பெட்​டிகளை தயாரித்து வரு​கிறது. இதுத​விர வந்​தே​பாரத் ரயில், அம்​ரித் பாரத் ரயில்​களும் தயாரித்து வழங்​கப்​படு​கின்​றன. சமீபத்​தில் இங்கு 80 ஆயிர​மாவது ரயில் பெட்டி தயாரிக்​கப்​பட்​டது. இந்த ஆலை​யில் 2025-26ம் நிதி​யாண்​டில் அதிக பெட்​டிகள் தயாரித்து சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து ஐசிஎப் அதி​காரி​கள் கூறிய​தாவது: 2025-26ம் நிதி​யாண்​டில் மட்​டும் 3,405 ரயில் பெட்​டிகள் தயாரிக்கப்​பட்​டுள்​ளன. கடந்த 2024-25ம் நிதி​யாண்​டில் 3007 ரயில் பெட்​டிகள் தயாரிக்​கப்​பட்​டன. இதனுடன் ஒப்பிடும்​போது தற்​போது 13.2 சதவீதம் உற்​பத்தி உயர்ந்​துள்​ளது. புதிய ரயில் பெட்​டிகளில் வந்தே பாரத் தூங்​கும் வசதி பெட்​டிகள், வந்தே பாரத் ரயி​லில் அமரும் நாற்​காலி பெட்​டிகள், மின்​சார மற்​றும் மெமு ரயில்​களின் குளிர்​சாதன பெட்​டிகள் உள்​ளிட்​டவை மட்​டும் 2,548 பெட்டிகள் தயாரிக்​கப்​பட்​டுள்​ளன. 22 அம்​ரித் பாரத் ரயில்​களுக்​குரிய பெட்​டிகளும் இதில் அடங்​கும். கொல்​கத்தா மெட்​ரோவுக்கு உரிய ரயில் பெட்​டிகளும் தயாரிக்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர்​கள் கூறினர்​.

Related Stories: