அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் 181 பேருக்கு பணி ஆணை

திருவொற்றியூர், ஏப்.8: திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 181 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. கல்லூரி நிர்வாகம் மற்றும் மேஜிக் பஸ் நிறுவனம் இணைந்து நடத்திய இந்த வேலைவாய்ப்பு முகாமில், விப்ரோ, வி4யு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், முன்னாள் மாணவர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் கலந்துகொண்டனர்.

இளங்கலை வணிகவியல் மாணவிகள் ராஜஸ்ரீ, விஜயலட்சுமி, யோக பிரியா, இளங்கலை ஆங்கிலம் பாடப் பிரிவு மாணவி சரஸ்வதி, மாணவர் முகமது ஜமீர் உட்பட 181 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி ஆணைகளை கல்லுாரி முதல்வர் விஜயா, பேராசிரியர் சீனிவாசன், வேலைவாய்ப்பு அதிகாரிகள் புனிதகுமாரி, தாட்சாயிணி, பவித்ரா, கல்லூரியின் நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மபிரியா மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் வழங்கினர்.

 

Related Stories: