திருப்பட்டினம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் தாதா எழிலரசி கைது: நாகூர் அருகே பரபரப்பு

காரைக்கால்: புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், முன்னாள் எதிர்கட்சி தலைவருமான வி.எம்.சி.சிவக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட புதுச்சேரி பிரபல பெண் தாதா எழிலரசி மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.  தலைமறைவாக இருந்த இவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் சுவாமிநாதனை சந்தித்து பாஜகவில் எழிலரசி இணைந்ததாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளிவந்த புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் எழிலரசி போட்டியிட போவதாக அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் நிரவி திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட எழிலரசி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். தகவல் அறிந்து சென்ற காரைக்கால் போலீசார் நாகூர் அருகே வாஞ்சூர் என்ற இடத்தில் எழிலரசியை மடக்கி கைது செய்தனர்.

Related Stories: