காட்டுமன்னார்கோவிலில் தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு: தேர்தல் கண்காணிப்புக்குழு ஆய்வு

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் தரையிறங்கிய தனியார் ஹெலிகாப்டரை தேர்தல் கண்காணிப்புக்குழு ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம்  காட்டுமன்னார்கோவிலில் அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியதாக தேர்தல் பணிக்குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் நடவடிக்கை நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் சேரன் தலைமையில் குழுவினர். சிறப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேகம் ஏற்படும் விதத்தில் பணம் பொருட்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபர் ஒருவர் ஆண்டுதோறும் கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடும்பத்தினருடன் தங்களது குலதெய்வமான காட்டுமன்னார்கோவிலில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசித்துவிட்டு செல்வது வழக்கம் எனவும் வழக்கம்போல இந்த ஆண்டும் குலதெய்வத்தை வழிபட வந்ததாக தெரியவந்தது. காட்டுமன்னார்கோவிலில் திடீரென ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Related Stories: