பெங்களூருவில் பெண் வாடிக்கையாளரை தாக்கிய சோமாட்டோ டெலிவரி பாய்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரலான நிலையில் கைது.!!!

பெங்களூரு: பெண் வாடிக்கையாளர் தாக்கிய சோமாட்டோ நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரைச் சேர்ந்த ஹிட்டாச்சா சந்ரேன் என்ற பெண் உணவு டெலிவரி செய்யும் சொமாட்டோ செயலி மூலம் நேற்று மாலை 3.30 மணியளவில் உணவை ஆடர் செய்துள்ளார். ஆடர் செய்த உணவு வெகு நேரம் ஆகியும் வீடுக்கு வந்தடையாததால், வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு புகார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, உணவை டெலிவரி செய்யும் ஊழியர் அவர் வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆடர் செய்த உணவை காலதாமதமாக கொண்டு வந்தது தொடர்பாக, ஹிட்டாச்சாவுக்கும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் ஹிட்டாச்சாவை தீடீரென தாக்கியுள்ளார்.

இதனால் மூக்கில் ரத்தம் சொட்டச் சொட்ட ஹிட்டாச்சா சந்ரேன் தனது இஸ்டாகிராம் பக்கத்தில்  வீடியோ பதிவிட்டிருந்தார். வீடியோவில், ஹிட்டாச்சா, உணவு டெலிவரி செய்ய வந்த ஊழியரின் ஆக்ரோஷமான நடத்தையை கண்டு கதவை மூட முயன்றேன். ஆனால், அவர் உள்ளே நுழைந்து என் முகத்தில் தாக்கினார். அருகில் உள்ளவர்கள் யாரும் என்னை மீட்க வரவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சோமாட்டோ நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. சமந்தப்பட்ட நபரை பணிநீக்கம் செய்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட டெலிவரி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு டி.சி.பி (தென்கிழக்கு) ஜோஷி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். அவர் மீது தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Related Stories: