கேரளாவில் வேட்பாளர்கள் அறிவிப்பு 5 அமைச்சர்களுக்கு மார்க்சிஸ்ட் டாடா: 33 எம்எல்ஏ.க்களுக்கும் சீட் இல்லை

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டில் 5 அமைச்சர்கள், 33 எம்எல்ஏ.க்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இங்கு மொத்தம் 140 தாகுதிகள் உள்ளன. இதில், ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 85 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், 83 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அது வெளியிட்டது. 2 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர்களுக்கு இந்த முறை சீட் இல்லை என்று கட்சி ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி அமைச்சர்கள் ஜெயராஜன், சுதாகரன், தாமஸ் ஐசக், ஏ.கே.பாலன் உள்பட 5 அமைச்சர்கள், 33 எம்எல்ஏ.க்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டில் கடந்த முறையை போல் இப்போதும் 12 பெண்களுக்கு சீட் அளிக்கப்பட்டுள்ளது.

* வேட்பாளர்களில் 4 பேர் 30 வயதுக்கும், 8 பேர் 30 -  40 வயதுக்கும் உள்பட்டவர்கள். 42 பேர் பட்டதாரிகள். அவர்களில் 22 பேர் வக்கீல்கள்.

* முதல்வர் பினராய் விஜயன் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Related Stories: