செக் மோசடி வழக்குகள் தேக்கம் குழு அமைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நாட்டில் உச்ச நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில், 35 லட்சத்துக்கும் மேற்பட்ட செக் மோசடி வழக்குகள் தேங்கியுள்ளன. இந்த விவகாரத்தை தானாக முன் வந்து, விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. செக் மோசடி வழக்குகள் தேக்கமடைவதை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பரிந்துரைக்க குழு அமைக்கலாம் என பரிந்துரைத்த நீதிமன்றம், குறிப்பிட்ட காலத்திற்கு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செக் மோசடி வழக்குகளுக்கு தீர்வு காண்பது பற்றி பரிந்துரை அளிக்க, மும்பை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

Related Stories: