கேரள தங்க கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்!: பினராயி பெயரை தொடர்புபடுத்தும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் ஸ்வப்னாவை வற்புறுத்தியது அம்பலம்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் புயலை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில் புதிய திருப்பமாக முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுமாறு ஸ்வப்னா சுரேஷை அமலாக்கத்துறை அதிகாரிகள் வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளா மட்டுமல்லாது நாடு முழுவதும் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுமாறு நெருக்கடி கொடுத்தது தற்போது தெரியவந்துள்ளது. ஸ்வப்னாவுக்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி இந்த தகவலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விசாரணையின் போது பெரும்பாலும் பினராயி விஜயனை தொடர்புபடுத்தி கேள்விகள் இருந்ததாகவும், இந்தி மட்டும் ஆங்கிலத்தில் மட்டுமே அமலாக்கத்துறை அதிகாரிகள் ஸ்வப்னாவிடம் கேள்விகள் எழுப்பியதாகவும் அந்த பெண் போலீஸ் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த சமயத்தில் யாரோ ஒருவருடன் விசாரணை நடத்தியவர் இந்தியில் தொடர்ந்து போனில் பேசி தகவல்களை தொடர்ந்து பரிமாறி கொண்டே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேரளாவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெண் போலீஸ் அதிகாரி வெளியிட்டுள்ள தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: