தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் அவசர கூட்டத்துக்கு விஜயகாந்த் அழைப்பு.: அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகலா..?

சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் அவசர கூட்டத்துக்கு விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.  நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் தேர்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வின் தொகுதி பங்கீட்டில் மட்டும் இழுபறி நீடித்து வருகிறது. தற்போதுவரை அதிமுக- தேமுதிக உடனான தொகுதி பங்கீடு செய்வது குறித்து கடந்த 10 நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அதனைத்தொடர்ந்து நேற்றிரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக, தேமுதிக இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அவசர கூட்டத்துக்கு விஜயகாந்த் அழைப்பு விடுத்து உள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் அவசர கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: