அதிமுக-பாஜ கூட்டணியை தோற்கடித்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்: சீதாராம் யெச்சூரி பேச்சு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் தென்சென்னை மாவட்ட செயலாளர் பாக்கியம் தலைமையில்  மதுரவாயலில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது: கொரோனா காலத்தில் பொருளாதார சரிவு ஏற்படவில்லை. அதற்கு முன்பு இருந்தே பொருளாதார வீழ்ச்சி அதிகரித்து உள்ளது. ஒரு ஆண்டில் 15 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். தொழிலாளர்கள் உரிமை பறி்க்கப்படுகிறது. மோடி அரசு பணக்காரர்களை மிகப்பெரிய சூப்பர் பணக்காரர்களாக ஆக்குகிறது. தனியார் மயத்தை நோக்கி இந்த அரசு சென்று கொண்டிருக்கிறது.

மதத்தை அடிப்படையாக வைத்து பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயல்கிறது. தலித் மற்றும் ஆதிவாசி பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜவுக்கு எதிர்கருத்து கொண்டவர்கள் மிரட்டப்படுகிறார்கள். காசு கொடுத்து எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்படுகின்றனர். தேர்தல் ஆணையமும், சுப்ரீம் கோர்ட்டும் ஒன்றும் செய்யவில்லை. பாட்டுப்பாடும் சூத்திரதாரி மோடி, அவரது பாட்டுக்கு பின் பாட்டு பாடுபவர்கள் பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும. இந்தியாவில் அதிக கடன் உள்ள மாநிலம் தமிழகம் தான்.

Related Stories: