யாரிடம் கேட்டு கேரள எல்லை மூடப்பட்டது?: ஐகோர்ட் கேள்வி

திருவனந்தபுரம்: ‘யாரிடம் கேட்டு ேகரள எல்லை மூடப்பட்டது?’ என கர்நாடக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கேரளாவில் சமீப காலமாக ெகாரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதனால், கேரள எல்லைகளை கர்நாடக அரசு திடீரென மூடியது. இதன் காரணமாக, கர்நாடகாவுக்கு செல்லும் கேரளாவை சேர்ந்த நோயாளிகள், ெபாதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால், கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சுப்ைபயாரே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘கேரள எல்லையை மூட யார் உங்களுக்கு அதிகாரம் தந்தது?’ என ேகள்வி எழுப்பியது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘கேரள எல்லையை மூட உத்தரவு பிறப்பித்தீர்களா? என மத்திய அரசு வக்கீலிடம் நீதிபதி கேட்டார். அதற்கு அவர் ‘‘இல்ைல’’ என பதிலளித்தார். இதையடுத்து, நீதிபதி கூறுகையில், ‘‘எந்த மாநிலங்களுக்கு இடையேயும் எல்லைகளை மூடக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது,  யாரிடம் கேட்டு கேரள எல்ைலயை கர்நாடக அரசு மூடியது. இது மத்திய அரசுக்கு எதிரான ெசயலாகும்,’’ என்றார். மேலும், விசாரணையை 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: