ஆண்டிபட்டி-வத்தலக்குண்டு மார்க்கத்தில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி-வத்தலக்குண்டு மார்க்கத்தில் சேதமடைந்த சாலையால் போக்குவரத்திற்கு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஆண்டிபட்டியில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையில் சில்வார்பட்டி, டி.புதூர், அணைக்கரைபட்டி, முணாண்பட்டி, நடுக்கோட்டை, சேடபட்டி,  புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் தினசரி 4 அரசு பஸ்களும் மற்றும் டூவீலர், கார்,  ஆட்டோ, லாரி உள்ளிடட் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழை காரணமாக  ஆண்டிபட்டி- வத்தலக்குண்டு சாலை மிகவும் சேதமடைந்துள்ளன. இதனால், வாகனஓட்டிகள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். மேலும்,  இப்பகுதியில் விளையும் விளைபொருட்களை கொண்டு செல்லவும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ்கள் சென்று  வருவதற்கும் சிரமமாக உள்ளது.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஆண்டிபட்டி- வத்தலக்குண்டு மார்க்கத்தில் பல இடங்களில் சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு  லாயக்கற்று உள்ளது. அதிக வளைவுகளை கொண்ட இச்சாலையில் குண்டு, குழியுமாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: