உதகை அருகே அவலாஞ்சி வனப்பகுதியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வகை வெள்ளை நிற புலிகள் நடமாட்டம்

உதகை: உதகை அருகே அவலாஞ்சி வனப்பகுதியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு அரியவகை வெள்ளைநிற புலிகள்  தென்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உதகை அருகே அவலாஞ்சி வனப்பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த புகைப்பட கலைஞர் 2 வெள்ளை புலிகளை புகைப்படம் எடுத்து வனத்துறையினரிடம் கொடுத்துள்ளார். அதனை கண்டு வியப்படைந்த வனத்துறையினர் வெள்ளை புலிகளின் நடமாட்டத்தை அறிய 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.

அதில் 4 வெள்ளை புலிகளின் நடமாட்டம் பதிவாகியிருந்தது. அதன் பின்னர் அந்த வெள்ளை புலிகள் தென்படவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் அவலாஞ்சி மின்வாரிய குடியிருப்பு அருகே 2 வெள்ளை புலிகளை அங்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலார்கள் பார்த்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் வெள்ளை புலிகளின் நடமாட்டத்தை கண்டறிய உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>