தாம்பரம் அருகே பூங்காவில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி: உறவினர்கள் போராட்டம்

சென்னை: தாம்பரம் அருகே உள்ள பூங்காவில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியாகியுள்ளான். அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை பேரூராட்சிக்கு உட்பட சக்திநகர் பகுதியில் உள்ள பூங்காவில் சிறுவர்கள் விளையாடியுள்ளார். அந்த பூங்காவில் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட வில்லை.

இந்த நிலையில் அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென மோட்டார்களை இயக்கி குளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள ஒரு மின்விளக்கு கம்பத்தில் ஒயர் பழுதாகி மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து உள்ளது. அந்த பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சக்திநகர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி வரதராஜன் மகன் கெளதம்(11) என்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த மின்கம்பத்தை சிறுவன் தொட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

இதனை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்நிலையில் அந்த பேரூராட்சி நினைவாக்கத்தினருக்கும் பீர்க்கன்கரணை காவல்நிலையத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்விற்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனாலும் சிறுவனின் பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் அங்குள்ள அக்கம் பக்கத்தினர் பேரூராட்சி நிர்வாகம் மிகவும் அலட்சியமாக கண்காணிப்பிற்கு ஒரு காவலாளி கூட நியமிக்கப்படவில்லை. இதனால் தான் இருந்ததால் சிறுவர்கள் விளையாடக்கூடிய பூங்காவில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: