டெல்லியை சுட்டெரிக்கிறது வெயில்

புதுடெல்லி; டெல்லியில் நேற்று வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக 33.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். ஆனால் அடுத்தசில நாட்களில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக 33.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. குறைந்தபட்சமாக 13.4 டிகிரி செல்சியஸ் பதிவானது. பாலம் பகுதியில் 31.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும், லோதிரோட்டில் 32.6 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவானது. குறைந்தபட்சமாக பாலம் பகுதியில் 16.4 டிகிரி செல்சியசும், ரிட்ஜ் பகுதியில் 16.3 டிகிரியும் பதிவானது. இன்றும் கடுமையான வெப்பம் இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 13 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>