பட்டாசு ஆலை விபத்து பலி 22 ஆக உயர்வு

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில், பிப். 12ம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் சம்பவ இடத்தில் 19 பேர் உயிரிழந்தனர். அன்றிரவு மருத்துவமனையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். கடந்த 20ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாத்தூர் அருகே படந்தால் பகுதியை சேர்ந்த வைஜெயந்திமாலா (30) உயிரிழந்தார். இந்நிலையில், சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுகச்சரங்குடியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி ஜெயா (50) நேற்று உயிரிழந்தார். இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 19 பேர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>