39 லட்சம் மோசடி வழக்கு சன்னி லியோன் முன்ஜாமீன் மனு மார்ச் 8ம் தேதிக்கு தள்ளி வைப்பு

திருவனந்தபுரம்: பண மோசடி வழக்கில் நடிகை சன்னி லியோன் தாக்கல் ெசய்த முன்ஜாமீன் மனு மார்ச் 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பிரபல  பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு எதிராக எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரை சேர்ந்த  ஷியாஸ், கேரள டிஜிபியிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘‘நடிகை சன்னி  லியோன் கொச்சியில் துணிக்கடை திறப்பு விழா, காதலர் தினம் உள்பட பல்வேறு  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக கூறி என்னிடம் இருந்து ₹39 லட்சம் பணம்  வாங்கினார். ஆனால் கூறியபடி நிழ்ச்சிகளுக்கு வரவில்லை. எனவே அவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

கேரள டிஜிபி உத்தரவை தொடர்ந்து சன்னி லியோனிடம், கொச்சி குற்றப்பிரிவு  போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நடிகை சன்னி லியோன், அவரது  கணவர் டேனியல் ஹப்பர் உள்பட 3 பேர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை  எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, நடிகை சன்னி லியோனுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது. அவர் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் விசாரணை  அதிகாரியிடம் முன் அனுமதி பெற உத்தரவிடவேண்டும் என ஷியாஸ் தரப்பில் ஆஜரான வக்கீல்  தெரிவித்தார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை மார்ச் 8ம்  தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories:

>