பவர்புல்லா இருக்கும் பத்து இடங்களில் நிக்கப்போறோம்

எலக்‌ஷன் வந்தாலே மாநாடு, பேரணி நடத்தி பல்ஸ் பார்ப்பது அரசியல் கட்சிகளின் வழக்கம். இதில் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும், பிரதான கட்சிகளிடம் தங்களது பலத்தை காட்ட, இப்படி மாநாடு, பேரணி என்று கிளம்பிடுவாங்க. ஆனால் சமீபகாலமாக ஜாதி கட்சிகளும், அமைப்புகளும் இது போன்ற நிகழ்வுகளை நடத்திக்கிட்டு இருக்காங்க. இதில் ஒருபடி மேலே போய், ஒவ்வொரு ெதாகுதிக்கும் ஜாதி பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் வாய்ப்புக் குடுங்கன்னு ேகட்க ஆரம்பிச்சிருக்காங்க. இந்த வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்ேகாட்டில் செங்குந்தர் மகாஜன சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. ‘எங்கள் சமூகத்தை சேர்ந்தவருக்கு நடப்பு சட்டமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்களே களம் இறங்குவோம். அதேபோல் தமிழகம் முழுவதிலும் செங்குந்தர் சமூகம் பவர்புல்லா இருக்கும் 10 தொகுதிகளில் போட்டியிடுவோம். இது குறித்து எங்கள் சங்கத்தின் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது,’ என்று சங்கத்தை சேர்ந்த பாலதண்டபாணி கொளுத்தி போட்டுள்ளார். சங்கத்தின் குரல், கட்சிகளின் காதில் விழுமா? என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்து விடும்.

Related Stories: