தெலங்கானா எம்எல்சி தேர்தல் நரசிம்மராவின் மகள் வேட்பு மனு தாக்கல்: டிஆர்எஸ் சார்பில் களமிறங்குகிறார்

ஐதராபாத்:  முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகளான சுரபி வாணி தேவி தெலங்கானா சட்ட மேலவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தெலங்கானாவில்   காலியாக இருக்கும் 2 பட்டதாரி ஆசிரியர் தொகுதிக்கான சட்டமேலவை தேர்தல் வருகிற மார்ச் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின்  தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சார்பாக முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகள் சுரபி வாணி தேவி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து மஹபூப்நகர்- ரங்காரெட்டி ஐதராபாத் பட்டதாரி ஆசிரியர் ெதாகுதியில்  போட்டியிடுவதற்காக கலைஞர் மற்றும் கல்வியாளரான சுரபி வாணி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரான நரசிம்மராவ் 1990களில் பிரதமராக இருந்தவர். நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் மூலமாக மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். eதிரு.ராவ், அவரை டிஆர்எஸ் அரசானது  மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் நூற்றாண்டுவிழாவை அறிவித்தது.  குறிப்பிடத்தக்கது.

Related Stories: